நடிகர்கள், தொழிலதிபர்களை மணக்காமல் அரசியல்வாதிகளை கரம்பிடித்து பிரபலமான 5 நடிகைகள்: அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதால் பரபரப்பு

மும்பை: நடிகர்கள், தொழிலதிபர்களை மணக்காமல் அரசியல்வாதிகளை கரம்பிடித்த 5 நடிகைகளில் சிலர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் நடிகர்களும், நடிகைகளும், சக நடிகர், நடிகைகள் அல்லது தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்வது வழக்கம். ஆனால் சில நடிகைகள் சினிமா துறையை காட்டிலும் அரசியல்வாதியை தங்கள் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்து கொள்கின்றனர்.

திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் சினிமாவில் நடிப்பதும் இல்லை. தொடர்ந்து தங்களது கணவரின் அரசியல் வாழ்க்கையையோடு பயணிக்க தொடங்கி விடுகின்றனர். அவர்கள் அவ்வப்போது தலைப்பு செய்திகளிலும் இடம் பெறுகின்றனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஸ்வரா பாஸ்கர், ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவியான அம்ருதா பட்னாவிஸ், பெண் ஒருவர் தனக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறினார். இந்த விவகாரம் மகாாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் அமராவதி எம்பியான நவ்நீத் கவுர் ராணா, அப்போதைய ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தததால் சர்ச்சையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறாக அரசியல்வாதியை திருமணம் செய்து கொண்டு, அதன் மூலம் அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பெறுகின்ற 5 பிரபலங்களை பார்ப்போம்.

ஸ்வரா பாஸ்கர்: மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் பஹத் அகமது என்பவரை, பாலிவுட் நடிகையும், முற்போக்கான கருத்துகளை தெரிவித்து வருபவமான ஸ்வரா பாஸ்கர் கடந்த சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆயிஷா தாகியா: மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான பர்ஹான் ஆஸ்மி என்பவரை நடிகை ஆயிஷா தாகியா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, ஆயிஷா தாகியா சினிமாவில் நடிப்பதில்லை.

நவ்நீத் கவுர் ராணா: தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை நவ்நீத் கவுர் ராணா, மகாராஷ்டிராவை சேர்ந்த ரவி ராணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நவ்நீத் கவுர் ராணா, தற்போது அமராவதி தொகுதி எம்பியாக வலம் வருகிறார்.

குட்டி ராதிகா: மதசார்பற்ற ஜனதா கட்சியின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமியை, கடந்த 2006ம் ஆண்டு நடிகை குட்டி ராதிகா திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போதும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அம்ருதா பட்னாவிஸ்: மகாராஷ்டிரா மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிசை திரைப்பட பாடகி அம்ருதா பட்னாவிஸ் திருமணம் செய்து கொண்டார். சினிமாக்களில் அம்ருதா பட்னாவிஸ் நடிக்கவிட்டாலும் கூட, திரைத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Related Stories: