தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 31ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு-மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: