அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்களின் பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை  உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே-2020 முதல் மார்ச்-2022 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 2,867 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.551.12 கோடி வழங்கிட உத்தரவிட்டார்கள்.

அதனை தொடர்ந்து, முதற்கட்டமாக கடந்த 01.12.2022 அன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே-2020 முதல் மார்ச்-2021 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,241 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடி வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (27.03.2023) தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2021 முதல் மார்ச்-2022 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ. 308.45 கோடி  வழங்கப்படுகிறது.

இன்று (27.03.2023) தலைமைச் செயலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 23 விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து, ஏனைய 1,603 பணியாளர்களுக்கும் அந்தந்தப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாக  காசோலைகள் வழங்கப்படும். இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: