தலைமறைவாக திரியும் அம்ரித் பாலுக்கு அடைக்கலம் கொடுத்த பெண் கைது

சண்டிகர்:  அம்ரித் பால் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை பாட்டியாலா போலீசார் கைது செய்துள்ளனர்.  தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர் அண்மை காலமாக வெளிநாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.  கடந்த 18ம் தேதி அம்ரித் பால் சிங் கைது செய்யப்பட இருந்த நிலையில், தப்பியோடிய அம்ரித் பால் சிங், ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் உள்ள ஷாஹாபாத் பகுதியில் ஒரு கூட்டாளியின் வீட்டில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தன் அடையாளத்தை மறைத்து கொண்டு, குடையுடன் அம்ரித் பால் நடந்து செல்லும் சிசிடிவி பதிவுகள் வௌியாகின. அதன் அடிப்படையில் ஷாஹாபாத் சென்ற ஹரியானா போலீசார், அம்ரித், அவரது கூட்டாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பல்ஜித் கவுர் என்ற பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அம்ரித் பால் சிங் மற்றும் அவரது கூட்டாளி பப்பல்பிரீத் சிங் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்ததாக பாட்டியலா ஹர்கோபிந்த நகரில் வசித்து வந்த பல்பீர் கவுர் என்ற மற்றொரு பெண்ணை பாட்டியலா போலீசார் ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: