ஐதராபாத் விடுதலை போராட்ட தியாகிகளை மறந்த காங்கிரஸ்: அமித்ஷா குற்றச்சாட்டு

பிதார்: ஐதராபாத் விடுதலைக்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் மறந்து விட்டது என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் கோரட்டா கிராமத்தில் ஐதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவிடம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தை திறந்து வைத்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘ கடந்த 1948ம் ஆண்டு மே 9ம் தேதி ஐதராபாத் நிஜாமை எதிர்த்து போராடியவர்கள் 200 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  ஆனால், ஐதராபாத் விடுதலைக்காக பாடுபட்டவர்களை  காங்கிரஸ் ஒருபோதும் நினைவு கூர்வது இல்லை. அப்போது சர்தார் படேல் இருந்திருக்காவிட்டால், ஐதராபாத்துக்கு விடுதலை கிடைத்திருக்காது.  அதே போல், சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் ஆட்சியும் ஐதராபாத் விடுதலை பெற்ற தினத்தை கொண்டாடுவதற்கு தயக்கம் காட்டியது. ஆனால் , மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஐதராபாத் விடுதலை தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது என்றார்.

Related Stories: