சென்னை: மீனவ மக்களுக்காக போராடிய ஜீவரத்தினம் அந்த சமுதாயத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தார். பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை மீனவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். அவரது நினைவிடம் காசிமேடு சுடுகாட்டில் உள்ளது. இதனை புதுப்பித்து தரக்கோரி அவரது உறவினர்களும், மீனவ சமுதாயத்தினரும் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், தொகுதி மேம்பாட்ட நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கி, நினைவு மண்டபம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிந்தநிலையில் இதன் திறப்பு விழா, நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய அருணா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
