அமிர்த பாரத் திட்டத்தில் சென்னை கடற்கரை, கிண்டி உள்பட15 ரயில் நிலையம் மேம்படுத்தப்படும்: சென்னை கோட்ட மேலாளர் தகவல்

சென்னை:  சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து  சென்னை- சூலூர்பேட்டை மார்க்கமாக மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்து தொழிலாளர்கள், மாணவர்கள், வியாபாரிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர்  மின்சார ரயிலில் சென்று வருகின்றனர்.  இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் ரயில்வே கட்டுமான பொறியாளர் ஸ்ரீவித்யா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் சிறப்பு தணிக்கை ரயில் மூலம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில், நான்கு பிளாட்பார்ம் கொண்ட இந்த ரயில் நிலையம் இருபுறம் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் பார்வையிட்டார். இதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பகுதியில் ரயில் நிலையங்களை அமிர்த பாரத் திட்டத்தின் மூலம் 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.  இதில் கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், சென்னை பார்க், திருவள்ளூர், பெரம்பூர், சூளூர்பேட்டை, புனித தோமையார் மலை, மாம்பலம், திருத்தணி, கிண்டி, சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களாகும். இதற்கான, முதற்கட்ட ஆய்வு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தோம்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எக்ஸ்லேட்டர், லிஃப்ட், பார்க்கிங் வசதி, சாலை, கழிப்பறை, புக்கிங் சென்டர், தானியங்கி டிக்கெட் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். அதுமட்டுமல்ல கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் நிலையமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. ரயில் நிலையம் முழுவதும் குற்ற சம்பவங்கள் தடுக்கும் வகையில் மிக விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.

Related Stories: