இளநிலை மறுவாழ்வு அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட்

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் (மாற்று திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 1ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: