சில்லி பாயின்ட்...

* போபாலில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதலின் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மானு பேக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் 584 புள்ளிகள் பெற்ற மானு 3வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் டோரீன் வென்னகாம்ப் தங்கப் பதக்கமும், சீனாவின் ஜியூ டு வெள்ளிப் பதக்கமும் வென்றனர். 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மானு சர்வதேச போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.

*  ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, நடப்பு சீசனில் பங்கேற்பதற்காக நேற்று பெங்களூரு வந்தார். ஆர்சிபி அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஏப்.1ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

* பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட இருந்த இங்கிலாந்து நட்சத்திரம் ஜானி பேர்ஸ்டோ காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் மேத்யூ வில்லியம் ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடந்த பிக்பாஷ் லீக் தொடரில் 458 ரன் (ஸ்டிரைக் ரேட் 144.47) மற்றும் 11 விக்கெட் எடுத்து தொடர் நாயகன் விருது பெற்றவர்.

Related Stories: