காவல்துறை பறிமுதல் செய்த 1,593 வாகனங்கள் ஏப்.13ம்தேதி ஏலம்

சென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 1,520 இருசக்கர, 73 மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ) என மொத்தம் 1,593 மோட்டார் வாகனங்கள் சென்னை புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் 13.4.2023 அன்று காலை 10 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏல முன்பதிவு 3.4.2023, 4.4.2023 மற்றும் 5.4.2023 ஆகிய நாட்கள் காலை 10 மணி முதல் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது.

அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர். 13.4.2023 அன்று காலை 10 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும்.

Related Stories: