தாம்பரத்தில் ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி

தாம்பரம்: தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில், நேற்று முன்தினம் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் அருள்குமார், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் பங்கேற்றனர்.  சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மனிதச் சங்கிலியாக நின்றனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறுகையில், ‘‘வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே எங்களின் பிரதான கோரிக்கையான, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர், முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர்கள், பகுதி நேரத்தில் பணியாற்றக்கூடிய பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு காலவரை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

Related Stories: