சி.எம்.டி.ஏ., தொடர்பாக பேரவையில் அறிவித்த அரசு திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

சென்னை: சிஎம்டிஏ தொடர்பாக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், (சி.எம்.டி.ஏ) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தலைமை திட்ட அமைப்பாளர்கள், முதுநிலை திட்ட அமைப்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், கடந்த 2021-22ம் ஆண்டு மற்றும் 2022-23ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், 2023-2024ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும், 3வது முழுமைத் திட்டம் மற்றும் தொலைநோக்கு, நில சேர்மம், தள பரப்புக் குறியீடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், நீதிமன்ற வழக்குகள் நிலவரம், வரன்முறை திட்டம் மற்றும் கோயம்பேடு விற்பனை வளாகம் குறித்தும் அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. 

Related Stories: