அமெரிக்க வங்கிகள் திவால் எதிரொலி பொதுத்துறை வங்கிகள் கவனமாக இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சர்வதேச வங்கிகள் திவால் எதிரொலியாக இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் கவனமாக இருக்க வேண்டுமென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் சிலிக்கான் வேலி வங்கி திவாலான நிலையில் அடுத்தடுத்து பல வங்கிகள் நிதி  நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதன் எதிரொலியாக, பொதுத்துறை வங்கிகளின் செயல் திறன் மற்றும் நிதி அபாயங்களில் இருந்து அவற்றின் மீள் திறன் தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆய்வு  மேற்கொண்டார்.  

சுமார் 2 மணி நேரம் நடந்த ஆய்வு கூட்டத்தில், வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வதால் ஏற்படும் இழப்பு குறித்து அபாயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டுமென அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். மேலும் சிறந்த கார்ப்பரேட்  நிர்வாக நடைமுறைகைளை பின்பற்ற வேண்டும், ஒழுங்குமுறை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், விவேகமான பணப்புழக்க மேலாண்மையை உறுதி செய்ய வேண்டும், டெபாசிட் மற்றும் சொத்துக்களை பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், உலகளாவிய நிதி அழுத்தங்களை கண்காணித்து தொலைநோக்கு பார்வையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Stories: