டான்செட், சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

சென்னை: ஏப்ரல் 15-க்குள் டான்செட் மற்றும் சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு இயக்குனர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிப் பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் எம்பிஏ, எம்சிஏ பயில, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட்) தகுதி தேர்வு இன்று தொடங்கியுள்ளது. எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு  (சிஇஇடிஏ) நாளை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது நுழைவுத்தேர்வு இயக்குனர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் பேசியதாவத; டான்செட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கலந்தாய்வு கோவையில் நடைபெறவுள்ளது. டான்செட் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டும். சிஇஇடிஏ தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ பயில டான்செட் தேர்வு தொடங்கியது.

எம்டெக், எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் சேர பொது பொறியியல் நுழைவுத் தேர்வு (சிஇஇடிஏ) நாளை தொடங்கவுள்ளது. டான்செட் தகுதி தேர்வை 34,228 பேர் எழுத உள்ளனர். சிஇஇடிஏ தேர்வுகளை 4,961 பேர் எழுதுகின்றனர். 15 முக்கிய நகரங்களில் உள்ள 40 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இன்னும் ஒருவார காலத்துக்குள் விடைக்குறிப்பு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். விடைக்குறிப்பில் தவறுகள் இருப்பின் மாணவர்கள் திருத்தம் செய்யலாம் என பொது நுழைவு தேர்வு இயக்குநர் தெரிவித்தார்.

Related Stories: