சர்வதேச வனநாள் விழாவில் வனத்துறை வளர்த்த ஆமை குஞ்சுகள் பெசன்ட் நகர் கடலில் விடப்பட்டன: அமைச்சர் பங்கேற்பு

சென்னை: ஆண்டுதோறும் மார்ச் 21ம் தேதி சர்வதேச வன நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு விழா நேற்று வனத்துறை சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்தது. இதில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாணவ, மாணவியர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பங்கேற்ற தூய்மைப் பணியும், பேரணியும் எலியட்ஸ் கடற்கரையில் நடத்தப்பட்டது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று, வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பதின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து, கடற்கரை வளாகத்தில்  நடைபெற்ற தூய்மைப் பணியில் பங்கேற்று, வனத்துறை மூலம் வளர்க்கப்பட்ட ஆமை  குஞ்சுகளை கடலில் விட்டார். நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு,  முதன்மை தலைமை வன பாதுகாவலர் கேம்பா சுதாநாஷி குப்தா, தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாஸ் ரா ரெட்டி, சென்னை மண்டல வன பாதுகாவலர் கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வன அலுவலர் சண்முகம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: