பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி:  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பிக்களும், ராகுல் மன்னிப்பு கேட்க கோரி பாஜ உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கியது.  பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது.  தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றது.

நேற்றும் மக்களவை தொடங்கியவுடன் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல்காந்தியின், ஜனநாயகம் குறித்த கருத்து தொடர்பாக அவரது  நிலைப்பாடு மற்றும் விளக்கத்தை அளிப்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

இதை அடுத்து  அவையை 12மணி வரை அவர் ஒத்திவைத்தார். பின்னர் பிற்பகலில் நிதிமசோதாவை நிறைவேற்றிய பிறகு அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதேபோல் மாநிலங்களவையிலும் ராகுல் மற்றும் அதானி விவகாரத்தை எழுப்பி பாஜ மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அவை நடவடிக்கையை முடக்கினார்கள்.  இதன் காரணமாக அவை தலைவர் ஜெக்தீப் தன்கர் அவையை பிற்பகல் 2.30 மணி வரைக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார். பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

* நிதி மசோதா நிறைவேற்றம் பட்ஜெட் திட்டங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவை 64 அதிகாரப்பூர்வ திருத்தங்களுடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார். ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டுக்கொண்டிருந்த நிலையில் விவாதமன்றி நிதிமசோதா   நிறைவேற்றப்பட்டது.

Related Stories: