பின்தங்கிய பகுதிகளில் சிறுதொழில் நிறுவனங்களை தமிழ்நாடு அரசு அமைக்கும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி செல்வபெருந்தகையின் (காங்கிரஸ்) கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது: ‘பல பகுதிகளில் சிறு தொழில்கள் அதிகமாக வளர வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் தனியார் நிலங்களைப் பெறுவதற்கான முயற்சிகளை அரசின் மூலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆக, எந்தெந்த பின்தங்கிய பகுதிகளில் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் அமைக்க வேண்டுமோ, அந்தந்தப் பகுதிகளில் நிச்சயமாக அரசு நிலம் இருந்தால் அதை கையகப்படுத்தி அமைத்து தருவோம். இல்லையென்றால் தனியார் இடங்களைப் பெற்று, விலைக்கு வாங்கி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நிச்சயமாக அரசு அமைக்கும் என்றார்.

Related Stories: