அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உடுமலை தொகுதி எம்எல்ஏ உடுமலை ராதாகிருஷ்ணன் (அதிமுக) பேசுகையில், “உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி, கோலார்பட்டியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனை 24 மணி நேரம் செயல்படுகிறது. அங்கே மருத்துவர்கள் குறைவாக இருக்கிற காரணத்தால், அமைச்சர் உடனடியாக மருத்துவர்களை நியமனம் செய்து தருவாரா?” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப 1,021 மருத்துவர் பணியிடங்கள் எம்.ஆர்.பி. மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 2, 3 வாரங்களில் அந்த தேர்வு பணிகள் முடிவுறும் நிலையில் இருக்கிறது. 1,021 பணியிடங்களுக்கு 25,000 மருத்துவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களில் 1,021 மருத்துவர்களை தேர்வு செய்து, மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Related Stories: