இந்திய தூதரகங்கள் தாக்குதலில் சட்ட நடவடிக்கை அவசியம்: அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவுக்கு ஒன்றிய அரசு திடீர் கெடுபிடி

புதுடெல்லி:   இங்கிலாந்து தலைநகர் லண்டன், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்தினர். அம்ரித்பால்சிங்குக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பதை கண்டித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. லண்டன் தாக்குதல்  சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் தூதரக அதிகாரியின் பாதுகாப்பை ஒன்றிய அரசு குறைத்தது. இந்நிலையில் ஒன்றிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி நேற்று கூறுகையில்,‘‘ இந்திய தூதரகங்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக அந்த நாடுகள் அளிக்கும் உறுதிமொழிகள் தேவை இல்லை. அதற்கு பதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது’’ என்றார்.

Related Stories: