தமிழ்நாட்டில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கியது: பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் ரம்ஜான் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன் 30 நாட்கள் நோன்பில் ஈடுபடுவார்கள்.

இன்று வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து, ரமலான் நோன்பு தொடங்கியது. தமிழ்நாட்டில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படுவதாக அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழ்நாட்டில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு நோன்பை தொடங்கினர்.

Related Stories: