போதையில் விமானத்தில் தகராறு செய்த 2 பேர் கைது

மும்பை: துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில்  குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று நேற்று முன்தினம்  வந்தது. அதில், 2 பேர், விமானத்தில் மதுபானம் குடித்தனர். இதை பார்த்த விமான பணிபெண்கள், விமானத்தின் உள்ளே மதுபானம் குடிக்க தடை செய்யப்பட்ட விவரங்களை எடுத்து கூறினர்.  ஆனால், குடிபோதையில் இருவரும் ஆத்திரத்தில், இருக்கைகளில் இருந்து எழுந்து உள்ளனர். இதன்பின்னர், விமானத்தில் குடித்தபடியே நடந்து சென்றுள்ளனர். விமான ஊழியர்களிடமும் மற்றும் சக பயணிகளிடமும் தகராறில் ஈடுபட்டனர்.

இதுபற்றி விமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 2 பயணிகள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. விமானம் மும்பையில் வந்திறங்கியதும்  ஜான் ஜார்ஜ் டிசோசா(49) மற்றும் தத்தாத்ரேயா ஆனந்த் பப்பார்டேகர்(47) மற்றும் ஆகியோரை  போலீசார்  கைது செய்தனர்.

இதுபற்றி மும்பை காவல் துணை  ஆணையாளர்   கூறும்போது,‘‘ குடிபோதையில் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தில்  அவர்கள் முறைப்படி கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனை சட்டத்தின்  336வது பிரிவின் கீழ்  2 விமான பயணிகள்  மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: