தங்கசாலை அரசு அச்சகத்தில் ரூ.1.75 கோடி மதிப்பில் நவீன அச்சு இயந்திரம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

சென்னை: தங்கசாலை பேருந்து நிலையம் அருகே, ஏழு கிணறு பகுதியில் அரசு அச்சகம் உள்ளது. இங்கு, அரசு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், தேர்தல் படிவங்கள் உள்ளிட்டவை அச்சிடப்பட்டு, தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்த அச்சகத்தில், செய்தித்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இந்த அச்சகத்தில், ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில், புதிய நவீன அச்சுப்பொறி இயந்திரம் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வண்ணம் அச்சு இயந்திரம் ஆகியவற்றை அமைச்சர்கள் எம்.பி.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து, ஊழியர்களிடம் வேலை குறித்து கேட்டறிந்தார். பின்னர், புதிதாக வாங்கப்பட்டுள்ள அச்சுப்பொறி இயந்திரம் கணினியில் இருந்து, நேரடியாக பல வண்ணங்களில் அச்சு பிரதிநிதிகள் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் வழுவழுப்பான தாள்கள் அட்டைகளில் அச்சுபடம் ஆகியவை அச்சு செய்யப்படும். இதில், 4 வண்ணங்களில் அச்சு செய்யப்படும். அதிக வசதிகளை கொண்ட இயந்திரமாக இது உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் செய்தித்துறை அரசு செயலர் செல்வராஜ் மற்றும்  அதிகாரிகள் பகொண்டனர்.

Related Stories: