டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா 4 மாநில பாஜ தலைவர்கள் மாற்றம்: ஜே.பி.நட்டா அதிரடி உத்தரவு

புதுடெல்லி: டெல்லி, பீகார் உள்பட 4 மாநில பாஜ தலைவர்களை மாற்றி பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வௌியிட்ட அறிக்கையில் “தற்போது டெல்லி பாஜ செயல் தலைவராக பணியாற்றி வரும் வீரேந்திர சத்தேவா டெல்லி மாநில பாஜ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில பாஜ தலைவரான சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக தற்போது பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள சாம்ராட் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த பாஜ எம்பி சி.பி.ஜோஷிக்கு ராஜஸ்தான் மாநில பாஜ தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் ஆம்பர் தொகுதி எம்.எல்.ஏ சதீஷ் பூனியாவுக்கு பதிலாக சி.பி.ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநில பாஜ தலைவராக முன்னாள் மாநில அமைச்சர் மன்மோகன் சமல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருசில மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலும்  நடைபெறவுள்ள நிலையில் பாஜ மாநில தலைவர்களின் அதிரடி மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: