ரூ.400 கோடி போதை பொருள் கடத்திய 3 பேர் கைது

அய்சால்/கரீம்கன்ஜ்: வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மியான்மர் எல்லையை ஒட்டிய சம்பை நகரில் ரூ.390.4 கோடி மதிப்பிலான 39 லட்சம் ஆன்டிஹிஸ்டமின் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல், மற்றொரு வடகிழக்கு மாநிலமான அசாமில் கரீம்கன்ஜ் பகுதியில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவை மிசோரமில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: