நல்லுறவை வளர்க்கும் வகையில் புதுவையில் பெத்தாங் போட்டி பிரான்ஸ் நாட்டினர் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி- பிரான்ஸ் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில், புதுச்சேரியில் நடைபெற்ற பெத்தாங் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடினர். புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோது 1858ம் ஆண்டு சர்க்கிள் டி பாண்டிச்சேரி என்ற கிளப் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பிரெஞ்சு கலாச்சாரம் மாறாத வகையில் இங்கே பல்வேறு பாரம்பரியமிக்க போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஒன்றான பிரான்ஸ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டில் பாரம்பரிய விளையாட்டான பெத்தாங் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுலாவாக வந்துள்ள பிரான்ஸ் நாட்டு குழு புதுச்சேரியில் உள்ள சர்க்கிள் பாண்டிச்சேரியில் நடந்த பெத்தாங் போட்டியில் கலந்துகொண்டு இரவு விளையாடினர். 13 பேர் குழுவாக வந்த பிரான்ஸ் நாட்டவர்கள் புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள சர்க்கிள் டி பாண்டிச்சேரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டனர்.

Related Stories: