திடிரேன பற்றி எரிந்த குழந்தைகள் ஐசியூ: நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின

திருச்சூர்: திருச்சூர் மருத்துவமனையில் குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின. கேரளா மாநிலம் திருச்சூரின் ஒளரி பகுதியில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், அருகிலுள்ள பிரசவ வார்டுக்கும் மளமளவென புகை பரவியது. இதில் நல்வாய்ப்பாக தீ விபத்து ஏற்பட்டவுடன் குழந்தைகள் ஐசியூவில் இருந்த 7 குழந்தைகளும் மீட்கப்பட்டனர்.

பின்னர், பிரசவ அறையில் இருந்த 2 கர்ப்பிணிப் பெண்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: