இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கூகுள் நிறுவன சேவை முடக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

சென்னை: சென்னை காலை 11:22 மணியிலிருந்து கூகுள் செயல்தளத்தின் சர்ச் இஞ்சின், யூடியூப், ஜிமெயில், கூகுள் டிரைவ் போன்றவற்றை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக பலர் இணையத்தில் புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்த சேவைகளை நம்பி பணியாற்றி வரும் பல கோடி பேர் சேவை முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பாதிப்பு இந்தியாவில் மட்டுமா அல்ல உலகின் பிற நாடுகளிலும் உள்ளதா என கேள்வி எழும் இதே வேளையில் டிவிட்டரில் Youtubedown என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ், கூகுள் அனலிட்டிக்ஸ் சேவை முடக்கம் சில நிமிடங்களில் சரியாகிவிட்டதாக தெரிகிறது.

சில வாரங்களுக்கும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது, இதை தொடர்ந்து முன்னணி டெக் நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தின் சேவைகளும் முடங்கியுள்ளது. பெரிய நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளை குறைக்க திட்டமிடும் வேளையில் டெக் சப்போர்ட்-ஐ கவனிக்க மறந்துள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. இதேவேளையில் கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை AI Chatbot பிரிவில் பெரிய அளவில் போட்டிப்போட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் ஒருப்பக்கம் ChatGPT வைத்து பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து கூகுள் இடத்தை பிடிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் முக்கிய பிராடெக்-களான ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ், கூகுள் அனலிட்டிக்ஸ் ஆகியவை முடங்கியது. இதனால் டிவிட்டரில் ட்வீட்கள் பறக்க துவங்கியது.

Related Stories: