சென்னை தங்க சாலை அரசு அச்சகத்தில் ரூ.1.75 கோடியில் நவீன அச்சு இயந்திரம்: அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு இயக்கி வைத்தனர்

தண்டையார்பேட்டை: சென்னை தங்கசாலை பேருந்து நிலையம் அருகே ஏழுகிணறு பகுதியில் அரசு அச்சகம் செயல்படுகிறது. இங்கு அரசு தொடர்பான முக்கிய ஆவணங்கள், தேர்தல் படிவங்கள் அச்சடிக்கப்பட்டு, தமிழகம்  முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்த அச்சகத்தில் இன்று காலை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அரசு அச்சகத்துக்கு ₹1.15 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள நவீன அச்சுப்பொறி இயந்திரம், ₹60 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள நான்கு வண்ணம் அச்சு இயந்திரம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் இயக்கிவைத்தனர். இதையடுத்து  அச்சக ஊழியர்களிடம் வேலை குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது அச்சக ஊழியர்கள் சிலர் அமைச்சர்களிடம் மனு அளித்தனர். புதிதாக வாங்கப்பட்டுள்ள அச்சுப்பொறி இயந்திரம் கணினியில் இருந்து நேரடியாக பல வண்ணங்களில் அச்சு பிரதிநிதிகள் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் வழவழப்பான தாள்கள் அட்டைகளில் அச்சுபடம் ஆகியவை  அச்சுசெய்யப்படும். இதில் 4 வண்ணங்களில் அச்சு செய்யலாம். தற்போது அதிகளவு வசதி கொண்ட இயந்திரமாக இது உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது, செய்தித்துறை அரசு செயலர் செல்வராஜ் மற்றும் பாலதிரிபுர சுந்தரி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: