முதலமைச்சர் மீது பொறாமையுடனும் அரசியல் காழ்புணர்ச்சியுடனும் பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார் : அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்

சென்னை : வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு குறித்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்த அறிக்கையில், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த எந்த அறிவிப்பும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் வரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், முதலமைச்சர் மீது பொறாமையுடனும் அரசியல் காழ்புணர்ச்சியுடனும் எந்த வித தகவல்களையும் தெளிவாக அறிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் அனைவரும் அரசை கொண்டாடி வருவதாக கூறியுள்ள அமைச்சர், கரும்பு விவசாயிகளுக்கு பயனளித்து வந்த மாநில அரசு பரிந்துரை விலை அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மூடுவிழா கண்டவர், இன்று கரும்பு விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார் என்றும் பழனிசாமியை அமைச்சர் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிக்கு ஒதுக்கிய நிதியில் ஒரு பங்கினை தங்கள் வசமாக்கிக் கொண்டவர் என எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல் கொள்முதல் விலையினை இந்த அரசு படிப்படியாக உயர்த்தி வருகிறது என்று தெரிவித்துள்ள அமைச்சர், 10 ஆண்டுகளாக இலவச மின்சார இணைப்பு வழங்காமல் இருந்துவிட்டு, இப்பொது மும்மனை மின்சாரம், இருமுனை மின்சாரம் என்று எடப்பாடி பழனிசாமி கதையளிப்பதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார். திமுக அரசுக்கு கிடைக்கும் பாராட்டுகளை பொறுத்து கொள்ள முடியாத பழனிசாமி குறை கூறி அறிக்கை வேலியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: