திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

அம்பத்தூர்: ஆவடி அருகே, பருத்திப்பட்டு, திருவேற்காடு, சுந்தர சோழபுரம், கோளடி, அயப்பாக்கம், அயனம்பாக்கம், அம்பத்தூர் தொழில்பேட்டை, மதுரவாயல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சந்திப்பு சாலை அமைந்துள்ளது. இதில், சுந்தர சோழபுரம் கிராமத்தில் சுமார் 5000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் இந்த சாலை சந்திப்பின் வழியாகத்தான் ஆவடி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் சென்று வருகின்றனர்.

பருத்திப்பட்டிலிருந்து பேருந்தில் வந்தாலும் அல்லது இரு சக்கர வாகனத்தில் வந்தாலும் சுந்தர சோழபுரம், எம்.ஜி.ஆர் நகர், கோளடி, அயப்பாக்கம், அயனம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளது. இந்த சாலைகள் அனைத்தும் வளைந்தும், குறுகளாகவும் காட்சியளிக்கிறது. இந்த சாலையின் இரு பக்கமும் காடு போன்று காட்சியளித்து வருகிறது.  இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மின் விளக்கு இல்லாத காரணத்தால், இரவில் பேருந்து நிறுத்தத்தில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளுக்கும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இங்கு அதிக விபத்துகள் நடந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, சுந்தர சோழபுரம் இணைப்பு, கோளடி சந்திப்பு சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்றும், எரியாத தெரு விளக்கை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: