போரூர் பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்தர விழா வேல்பூஜை சபா தேர் திருவிழா நடத்த அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் போரூர் பங்குனி உத்தரம் பால் காவடி, வேல் பூஜை சபா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், போரூர் பாலமுருகன் கோயிலில் ஏப்ரல் 4ம் தேதி முதல் 6 வரை, எங்கள் சபாவின் குடும்பத்தினரை 46 வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையும், தேர் திருவிழாவையும் நடத்த அனுமதிக்குமாறு கோயில் தக்காருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன், போரூரில் 1981-ம் ஆண்டு மனுதாரர் சபா உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடை மூலம் பாலமுருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இதற்காக 8 கிரவுண்டு நிலம் சபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தக்காரை நியமித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இதேபோல் விழாவுக்கு உயர் நீதிமன்றம் மனுதாரர்களுக்கு அனுமதி தந்துள்ளது. எனவே, மனுதாரர் சபா பங்குனி உத்தரத் திருவிழாவை முன்னிட்டு பாலமுருகன் கோயிலில் வேல் பூஜை, தேர் திருவிழா ஆகியவற்றை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக ஆகும் செலவுத் தொகையை மனுதாரர் சபா வழங்க வேண்டும். மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்த விழாவை நடத்த வேண்டும்.

Related Stories: