நெடுஞ்சாலை துறையில் பழைய பணிகளுக்கு ரூ.258 கோடி அரசாணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றி: ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை; நெடுஞ்சாலை துறையில், பழைய பணிகளுக்காக ரூ.258 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தகாரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தகாரர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், மாநில தலைவர் சங்கு தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் உள்ள பழைய நிலுவை தொகையையும், புதிய பணிகளுக்கான தொகையை நிலுவை இல்லாமல் நிதி வழங்கல். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்திய நிலையில் கூடுதலாக 6 சதவீதத்தை பழைய பணிகளுக்கும் சுமார் 258 கோடியை தமிழக அரசே தருவதற்கு அரசாணை பிறப்பிப்பு. பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்து சிஎம்ஆர்டிபியின் கீழ் நடைபெறும் ஒப்பந்த பணிகளில் தமிழக ஒப்பந்ததாரர்களின் தகுதியை உயர்த்தி மாவட்ட அளவில் அனைவருக்கும் பணியாற்ற வாய்ப்பு.

புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுத்து சாலை மற்றும் மேம்பால பணிகளை வேகமாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க உறுதுணையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் விலைப்புள்ளி குறித்த நேரத்தில் வெளியிடுப்படுகிறது. இவ்வாறான நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: