50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவு பொருட்கள் அறிமுகம்

புதுடெல்லி: ஐம்பது ஆண்டுகளுக்கு பின் ராணுவ வீரர்களுக்கு மீண்டும் சிறுதானிய உணவு  பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐநா அறிவித்துள்ள நிலையில், ராணுவ வீரர்களுக்கு ரேஷனில் சிறுதானிய உணவு பொருட்கள் வினியோகிக்கப்படும். பாரம்பரிய சிறுதானிய உணவுகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. இதனைக் கருத்தில் கொண்டே ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பிரிவினருக்கும் அன்றாட உணவில் சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் சிறுதானியங்களுக்கு பதிலாக கோதுமை வழங்கப்பட்டது. தற்போது, ராணுவ வீரர்களுக்கு மீண்டும் சிறுதானிய உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த உணவை ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சிகள், உணவு திருவிழாக்கள், வீட்டு சமையலில் சிறுதானியங்களை பரவலாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: