2040ல் இந்தியாவின் விமானப் போக்குவரத்து 7% உயரும், 31,000 விமானிகள் தேவை : போயிங் நிறுவனம் கணிப்பு!!

டெல்லி : அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து 7% உயரும் என்று கனிந்துள்ள போயிங் நிறுவனம் 31,000 விமானிகள் தேவைப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற சிஐஐ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய போயிங் இந்தியா தலைவர் சலீல் குப்டே, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கு ஈடுசெய்ய 31,000 விமானிகளும் 26,000 மெக்கானிக்குகளும் தேவைப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்த காலகட்டத்தில் ஒட்டு மொத்தமாக தெற்காசியாவும் குறிப்பாக இந்தியாவிலும் விமானப் போக்குவரத்துத் துறை பெருமளவு வளர்ச்சியை காணும் என்று கூறினார். போயிங், ஏர் பஸ் நிறுவனங்களிடம் இருந்து டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் 470 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருக்கும் நிலையில், விமான நிலையங்கள் மற்றும் அது சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதும் அவசியம் என்றும் தெரிவித்தார். 2040ல் இந்தியாவில் விமான போக்குவரத்து 7% உயரும் என்று போயிங் கணித்து இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுவரக்கூடிய இந்தியா, விமானப் போக்குவரத்துத் துறையில் பெரிதும் வளர்ச்சியை எட்ட இருப்பதாக கூறினார்.

Related Stories: