ஆந்திராவில் இருந்து 15 லிட்டர் சாராயம் கடத்தியவர் கைது

திருத்தணி: ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கே.வி.புரம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் விஜயவர்மா (எ) சின்னத்தம்பி(36). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட பள்ளியாங்குப்பம் கிராமத்துக்கு நேற்று காலை பைக்கில் வந்தார். அரக்கோணம் புதிய புறவழிச்சாலையில் உள்ள ஜோதிநகர் பகுதியில் வரும்போது, நிலைதடுமாறி தான் வந்த பைக்குடன் சாலையில் விழுந்ததில் அவர் காயம் அடைந்தார்.

அப்போது, அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராய பாக்கெட்டுக்கள் அனைத்தும் உடைந்து சாலையில் கொட்டியது.  இதை பார்த்ததும் மக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர், நடத்திய விசாரணையில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: