மோடி கொடுத்த பரிசு பற்றி கணக்கு காட்டவில்லை: டிரம்ப் மீது குற்றச்சாட்டு

வாஷிங்டன்:  குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் உலக தலைவர்களிடம் இருந்து பெற்ற 2 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் பற்றி கணக்கு காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதில் சுமார் 38 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் பிரதமர் மோடி, அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட இந்திய தலைவர்களிடம் இருந்து டிரம்ப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: