வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகள் செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம், வங்கிகள், நூலகம், மேல்நிலைப் பள்ளிகள், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், சர்பதிவாளர் அலுவலகம், கருவுலக அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு வாலாஜாபாத் பேரூராட்சியின் மூலம் தொழில்வரி, வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிமம் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை, பேரூராட்சி ஊழியர்கள் மூலம் நாள்தோறும் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
