10 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.15 கோடியில் பல்லாண்டு பழச்செடிகள், பலா நெல்லி தொகுப்பு

சென்னை: பட்ஜெட் தாக்கலின் போது வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியது: தமிழ்நாடு, உணவு தானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பை அடைய பழங்களின் உற்பத்தி முக்கியம். பருவத்திற்கேற்ப இயற்கை நமக்கு தேவையான பழங்களை உற்பத்தி செய்து தருகிறது. கோடையில் குளிர்ச்சியான பழங்களையும், குளிர் காலத்தில் உடலை வெப்பத்தில் வைத்திருக்கும் பழங்களையும் தருவித்து தருகின்ற அமுதசுரபியாக திகழ்கிறது இயற்கை. எனவே, வரும் ஆண்டில் பத்து லட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு ரூ.15 கோடி நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு தொகுப்புகள் வழங்கப்படும்.

Related Stories: