ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் திமுக எம்.பி. பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்தார். அப்போது; பந்தயம், சூதாட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் 34-வது பிரிவில்

இடம்பெற்றுள்ளது.7-வது அட்டவணை, 34-வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டங்களை மாநில அரசுகளே இயற்ற முடியும். சில மாநில அரசுகள் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளன எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: