சரக்கு ரயிலில் நிலக்கரி ஏற்றுமதியில் விஜயவாடா ரயில்வே கோட்டம் சாதனை படைத்தது-₹1940.23 கோடி வருவாய் ஈட்டியது

திருமலை : விஜயவாடா கோட்டத்தின் கீழ் உள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் இருந்து சரக்கு ரயிலில் நிலக்கரி ஏற்றுமதி செய்ததில் விஜயவாடா ரயில்வே கோட்டம் சாதனை படைத்த, ₹1940.23 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடா கோட்டத்தின் கீழ் கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகம் 2009ம் ஆண்டு முதல் அதன் செயல்பாடுகளைத் தொடங்கி  வருவாயில் முக்கிய பங்காற்றி வருகிறது.

பெரும்பாலும் நிலக்கரி மற்றும் உரங்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. நடப்பு 2022-23 நிதியாண்டில் 12.95 மில்லியன் டன்கள் சரக்கு ஏற்றுமதி செய்து கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகம் வரலாற்றில் இதுவே அதிகம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய சாதனையை முறியடித்தது.  மொத்த சரக்கு ஏற்றுமதி வருவாயில் 75 சதவீதத்தின் பெரும்பான்மைப் பங்கை கொண்டுள்ளது.  

துறைமுகத்தின் சரக்கு வருவாய் ₹1940.23 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய நிதியாண்டை விட 110 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட, கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்தின் நிலக்கரி 148 சதவீதமும், உரம் 12.62 சதவீதமும், ஜிப்சம் 30 சதவீதமும், சுண்ணாம்புக்கல் 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.  ரயில் மூலம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளதால் சரக்கு போக்குவரத்து வருவாய் அதிகரித்துள்ளது.  சரக்குகள் சரியான நேரத்தில் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகள் அவ்வப்போது ரயில்களை சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சாதனை இலக்கை செயல்படுத்திய அதிகாரிகளுக்கு டிஆர்எம் சிவேந்திரமோகன், சீனியர் டிசிஎம் வி. ராம்பாபு, டிசிஎம் சோமசேகரநாயுடு ஆகியோர் கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்தில் அதிக நிலக்கரி ஏற்றி சாதனை படைத்ததற்காக  வணிக ஊழியர்கள் மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  இந்த நிதியாண்டிலும் அதே உற்சாக வேகத்துடன்  செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: