நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை.. சிறுதானிய உற்பத்தி: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் வரவேற்பு..!!

சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிறுதானிய உற்பத்தி, நஞ்சில்லா உணவு உற்பத்தி உள்ளிட்டவைகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதற்கு விவசாயிகள் வரவேற்பு அளித்துள்ளனர். இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் ஈட்டும் விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது, 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டதற்கும் விவசாயிகள் பாராட்டு தெரிவித்திருக்கிறார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு ரூ.6,536 கோடி நிதி, பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி அறிவிப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை, கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டதற்கும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: