நெல்லை டவுன் மேலரதவீதி அருகே செங்கோல் மடத்திற்கு சொந்தமான 26 கடைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

*அளவீடு செய்து வாடகை வசூலிக்க முடிவு

நெல்லை : நெல்லை டவுன் மேல ரதவீதி அருகே செங்கோல் ஆதீன மடத்திற்கு சொந்தமான 26  கடைகளை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வாடகை வசூலிக்க முடிவு செய்துள்ளனர். நெல்லை டவுன் மேல ரத வீதி அடுத்த செங்கோல் முடுக்குத் தெரு அருகே வைகுண்டம் பெருங்குளம் செங்கோல் ஆதீன மடத்திற்கு சொந்தமான 26 கடைகள் இருந்துவந்தன. ஆனால், இவற்றில் கடைகள் நடத்தி வந்தவர்கள் அக்கடைகளுக்கு இதுவரை வாடகை நிர்ணயம் செய்யப்படாமல் உபயோகம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து ஆய்வின் மூலம் தெரியவந்த அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த மடத்திற்கு சொந்தமான கடைகளை மீட்கவும், அளவீடு செய்து வாடகை வசூலிக்கவும் முடிவு செய்தனர்.

அந்தவகையில்  செங்கோல் மடத்தின் நிர்வாக மேலாளர் மணிகண்டன், கோயில் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், அறநிலையத்துறைஅதிகாரிகள் உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை டவுன் மடத்திற்கு சொந்தமான இடம் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த கடைகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டதோடு அளவீடும் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக அந்த கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, அதை பயன்படுத்துவோருக்கே கடைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மேல் நடவடிக்கையும் அறநிலையத்துறை உதவி ஆணையர் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: