கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில் சில்வர் பீசில் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் ஆமைகள் முட்டை இட்டுச் செல்வது வழக்கம். இந்த முட்டைகள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு வனத்துறையினர் ஒவ்வொரு கடலோர கிராமங்களிலும் ஆமை குஞ்சுகள் பொரிப்பகம் அமைத்து ஆமை முட்டைகளை சேகரித்து அங்கே பாதுகாத்து முட்டைகள் இருந்து வரப்படும் ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் அனுப்புவது வாடிக்கையாக உள்ளது.
