ஒன்றிய அரசு உத்தரவால் டெல்லி பட்ஜெட் தாக்கல் நிறுத்திவைப்பு: முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய அரசு உத்தரவால் டெல்லி பட்ஜெட் தாக்கல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,’ டெல்லி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்வதை நிறுத்தி வைக்கும்படி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சட்டசபையில் இன்று டெல்லி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. வரலாற்றில் முதன்முறையாக நமது நாட்டில் ஒரு பட்ஜெட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Related Stories: