கொரோனா சிகிச்சையில் ஆன்டிபயாடிக் மருந்து பயன்படுத்தக் கூடாது: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை தரக்கூடாது என ஒன்றிய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று லேசாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா தொற்று இல்லாத பட்சத்தில், லோபினாவிர்-ரிடோனாவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், ஐவர்மெக்டின், மோல்னுபிராவிர், பவிபிராவிர், அசித்ரோமைசின் மற்றும் டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது. பிளாஸ்மா தெரபியும் பயன்படுத்தக் கூடாது.

கொரோனா அறிகுறி தோன்றி 10 நாட்களுக்குள் மிதமான மற்றும் தீவிரமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதிகபட்சம் 5 நாட்கள் வரை ரெம்டெசிவிர் மருந்துகளை பரிந்துரைக்கலாம். இதுவும் ஆக்சிஜன் பொருத்தப்படாத மற்றும் வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரக்கூடாது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: