ராகுலை ஹீரோவாக்க பாஜ முயற்சி: மம்தா குற்றச்சாட்டு

பாஹராம்பூர்: நாடாளுமன்றத்தை முடக்கி ராகுல்காந்தியை ஹீரோவாக்குவதற்கு பாஜ முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி வீடியோகான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு பேசியதாவது:  பாஜவை எதிர்த்து போராடுவதில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் பாஜவுடன் காங்கிரஸ் கட்சிக்கு மறைமுக புரிதல் இருக்கின்றது.

 

ராகுல்காந்தியின் கருத்துக்களால் நாடாளுமன்றத்தை முடக்கி ராகுலை ஹீரோவாக ஆக்குவதற்கு பாஜ வேண்டுமென்றே முயற்சிக்கிறது. மற்ற எதிர்கட்சிகள் மக்கள் பிரச்னைகளை எழுப்பக்கூடாது என்பதற்காகவும் சொந்த நலனுக்காகவும் பாஜ இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ராகுல்காந்தியை எதிர்கட்சிகள் முகாமிற்கு ராகுலை ஹீரோவாக்குவதற்கு பாஜ விரும்புகின்றது. இவ்வாறு முதல்வர் மம்தா தெரிவித்தார்.

Related Stories: