சீருடைப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் குடும்பத்தைச்சேர்ந்த 123 நபர்கள் தனியார் நிறுவனங்களால் வேலைக்கு தேர்வு

சென்னை: சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் துணைவியார் மற்றும் வாரிசுகளுக்கு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 123 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், தமிழக காவல்துறையில், பணிபுரியும் காவல் ஆளிநர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மேற்படி சீருடை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    

அதன்பேரில், சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், கடந்த 18.03.2023 அன்று, வேளச்சேரி, குருநானக் கல்லூரி வளாகத்தில், சென்னை தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப்பணியளார்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்கான வேலை வாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார்.

    

இந்த வேலைவாய்ப்பு முகாம் 18.03.2023 மற்றும் 19.03.2023 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இவ்வேலை வாய்ப்பு முகாமில், முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகள் என 1038 நபர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடமிருந்து சுய விவரங்கள் பெறப்பட்டு கல்வி தகுதியின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுகள் மற்றும் இறுதிக்கட்ட தேர்வுகள் நடத்தி, மேற்படி சீருடைப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் குடும்பத்தைச்சேர்ந்த 123 நபர்கள் தனியார் நிறுவனங்களால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    

தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட சீருடைப்பணியாளர்கள் மற்றும்  அமைச்சுப்பணியாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 123 நபர்களுக்கு விரைவில் வேலைக்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என ஹெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: