இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார் என அறிவித்தார். இது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி

மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.

Related Stories: