நெசப்பாக்கத்தில் 137வது வட்ட திமுக சார்பில் 1500 பேருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

ஆலந்தூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் தெற்கு பகுதி, 137வது வட்ட திமுக சார்பில் நேற்று மாலை நெசப்பாக்கம், டாக்டர் காணு நகரில் நலிவுற்ற குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி பா.தினேஷ்குமார் தலைமை தாங்கினார். பகுதி நிர்வாகிகள் எஸ்.உமாபதி, எஸ்.ரவி, கனிமொழி தனசேகரன், கே.சதீஷ் கண்ணன், செந்தில்குமார், காணுநகர் கே.பி.ராமு முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் சென்னை மாநகராட்சி நிலைக்குழுவின் கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவருமான க.தனசேகரன் தலைமையுரை ஆற்றினார். இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த 1500 பேருக்கு ஹாட்பாக்ஸ் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், சென்னை, கோவை, மதுரை, தாம்பரம் உள்பட 11 மாநகராட்சிகளில் பெண்கள் மேயர்களாக பணியாற்றி வருகின்றனர். பெண் காவலர்களுக்கு நவரத்தின திட்டம், சிறப்பு விருந்தினர் மற்றும் முதலமைச்சர் செல்லும் பாதையில் பெண் போலீசார் நிற்க தடை ஆணை, மகளிருக்கான ₹1000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்.

இனி நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கும்போது, பெண்கள் பெயரிலேயே ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை மகளிர் மேம்பாட்டுக்காக நமது முதல்வர் வகுத்து தந்துள்ளார்’ என்றார். இதில் ஏஎம்வி.பிரபாகரராஜா எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் கே.கண்ணன், மு.ராசா, செயற்குழு உறுப்பினர் உ.துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ்.முருகேசன், வட்ட செயலாளர் செந்தில்குமார், கலைஞர் நகர் தெற்கு பகுதி மாணவரணி பா.ரமேஷ்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் மருதுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: