எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை: பட்ஜெட் உரையை அதிமுகவினர் புறக்கணிக்க உள்ளதாக தகவல்..!

சென்னை: சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாத1000 வழங்குவது, நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித்துறை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவருதல் ஆகியவை குறித்தும், முதல்வரின் காலை உணவுத்திட்டம் விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றுவார். அதன் பின்னர், சட்டபேரவை நிகழ்ச்சிகள் முடிவடையும் இந்நிலையில் சற்று நேரத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் இருக்கை மாற்றப்படாத நிலையில், இதை காரணமாக வைத்து பட்ஜெட் உரையை அதிமுகவினர் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: